மகளதிகாரம் 4 – சர்ப்ரைஸ்

நைட் கேக் வெட்டியாச்சு
நாளைக்கு அம்மாக்கு என்ன
பரிசு குடுக்க போற என்று
இருட்டில் hussky வாய்ஸில்
கேட்ட மகளுக்கு கம்மல் வாங்கி வெச்சுருக்கேன் என்று நானும்

அதே hussky வாய்ஸில் பதில் அளித்தேன்.
கம்மல்லாம் ஒரு கிப்ட்டாப்பா என்று
இருட்டில் கண் சிமிட்டினாள்,
பின்ன வேற என்ன குடுக்கலாம் என்று கேட்டதற்கு.

என் போர்வைக்குள் வந்தவள்,
தூங்கிகொண்டு இருக்கும் அவள் அம்மாவுக்கு கேட்காதவாறு
“நாமா நாளைக்கு அம்மாக்கு சர்ப்ரைஸ்
கொடுப்போம்” என்று ரெண்டு கையையும் விரித்து செய்கை செய்தாள்

Continue reading

Advertisements

மகளதிகாரம் – முதல் பிரிவு !!!  ( பாகம் – 3)

image

“உங்க பொண்ணு ஸ்கூலுக்குதான போன
அதுக்கு எதுக்கு மூஞ்ச தூக்கி வெட்சுறுகிங்க?னு”
மனைவி என்னை திட்டிக் கொண்டே பாத்திரம்
கழுவி கொண்டு இருந்தால்.

அவளுக்கு புரிந்த அளவுக்கு எனக்கும்
இந்த பிரிவின் காரணம் புரிந்தாலும்,
மனசுல என்னோ தாங்க முடியாத ஒரு வேதனை

Continue reading

மகளதிகாரம் – பொம்மை ( பாகம் 2)

image

நீங்க வீட்ல இல்லாதபோது உங்க பொண்ணு சேட்ட தாங்கல ;
எப்ப பாரு அந்த பொம்ம கூடவே இருக்குறா..

பொம்மைய சாப்ட வைக்கிறா;
பொம்மைய தூங்க வைக்கிறா;
இப்பலாம்
பொம்மைய குளிக்கவும் வைக்கிறா…
எல்லாம் நீங்க கொடுக்கும் செல்லம் தான் ,
என்று கத்தினால் மனைவி..

Continue reading

மகளதிகாரம் – தங்க வார்த்தை !!!  ( பாகம் – 1)

image

ஈரெட்டு வயதில் மீசையுடன்
வளர்ந்த ஆசைகளில்
ஓர் ஆசையும்
ஓர் பேராசையும் அடங்கும்.

ஆசை – மகள் வேண்டும் என்று ;
பேராசை – அவள் முதல்
வார்த்தை  ‘அப்பா’வாக இருக்க
வேண்டும் என்று;

முதல் ஆசை நிறைவேறிய
பேரானந்தத்தில்  மனமும் காலமும்
வேகமாக ஓடியது
பேராசை நிறைவேறும்
நாளை எண்ணி.

என் தங்கத்துக்கு
‘அம் அம் ‘ ஊட்டும் போதெல்லாம்
‘ அப்பா ‘ என்ற
வார்த்தையையும் சேர்த்து
ஊடினேன்.

Continue reading