அவள் – பாகம் 2

‘அவள்’ முதல் பாகம் படிக்காதவர்கள் , முதல் பாகம் படித்துவிட்டு தொடரவும் https://minthuligall.wordpress.com/tag/avall

– –  அவள் 2 – – 

அவனிடம் உண்மையை சொன்னதும் எதுவும் பேசாமல் விடு திரும்பினான்.

குற்றவுணர்வு  தலை தூக்கினாலும் தலை குனியாமல்  வீடு திரும்பினேன் , அவன் நியாபாகத்தோடு.

அவனிடம் உள்ளதை கூறிய போது அவன் முகம் சுழிக்கவில்லை முகம் சுளிக்காமல் என் அடையாளத்தை உள்வாங்கிய முதல் மனிதன் இவன் ஒருவனே.

Continue reading

ஓர் கனவு : விடியல்

image

அதிகாலை சூரியன் சோம்பல் முறிக்க;
மணலின் துயில் களையாமல்
கடல் காற்று வீச;
உறங்காத கிரக்கத்தில்
கடல் அலைகள் பாதம் நனைக்க;
நண்டுகள் தம் துளை விட்டு
நம் வரவை எட்டி பார்க்க…

குளிரை விரட்ட
மௌனத்தை இறுக்க
போர்த்திக் கொண்டு;
இதழ்கள் சேர்த்து , விரல்கள் கோர்த்து
முடிவு தெரியாத கடல் கரையின்
முடிவைத் தேடும் நடையில்
பல யூகம் வாழ்கிறோம்
அந்த ஒரு விடியலில்
நாம்.

ஷேக் அப்துல்லா

சிறந்த நகைச்சுவை

இவள் தான் பெண் என்று
தீர்மானிப்பதும் ஆண் தான்,
இப்படி பேசினால் தான் பெண் என்று தீர்மானிப்பதும் ஆண் தான்,
இதை உடுத்தினால் தான் பெண் என்று தீர்மானிப்பதும் ஆண் தான்,
இது வரைக்கும் தான் பெண் என்று தீர்மானிப்பதும் ஆண் தான்,
இது தான் பெண்ணுக்கு உகந்தது என்று தீர்மானிப்பதும் ஆண் தான்,
இதுக்காக மட்டும் தான் பெண்ணியம் என்று தீர்மானிப்பதும் ஆண் தான்,
ஆண் உலகில் பெண் ஒரு

சிறந்த நகைச்சுவை.

– ஷேக் அப்துல்லா

விழிகள் தேடிய புருவம் நீ

image

விழிகள் தேடிய புருவம் நீ
அருகில் இருந்தும் மறைவில் இருக்கிறாய்….
இருந்தும் தேடல் நிற்கவில்லை 
கண்டுகெண்டேன் உன்னை  
கண்கள் நிரம்பிய கனவுகள் ஒன்றில்…

-ஷேக் அப்துல்லா

கக்..கக்க…போ

image

1986 காதலும் கடவுள் ஆகும்
1996 காதலும் கடந்து போகும்
2006 காதலும் மறந்து போகும்
2016 காதல்களும் கடந்து போகும்
2026 காதல்களும் மறந்து போகும்
2036 காதல்களும் குழம்பி போகும்
2046 காதலும் தப்பிச்சு ஓடும்
2056 காதலும் காணாம போகும்
2066 காதலும் தேடப்படும்
2076 காதலும் கண்ணுல மாட்டும்
2086 காதலும் கடவுள் ஆகும்
2096 காதலும் கடந்து போகும்
கக்..கக்க…போ

– ஷேக் அப்துல்லா

இச் இச் சத்தம்…..

image

இதழ்கள் பேசிய வார்த்தைகளை
நாங்களும் பேசுவோம் என்று
விழிகள் அடம் பிடித்து
பேசி பழகிய தருணம் அது.

அவள் விழிகளுக்கு இருந்த சாமர்த்தியம்
என் விழிகளுக்கு ஏனோ இல்லை.
திக்கித்தவித்த என் விழிகளுக்கு
உதவ அவள் விழிகள் அருகில் வந்தன

அவள் விழி சொன்ன வார்த்தையை
மொழிபெயர்க்கும் முன்
வழி மறித்துக்கொண்டது
இதழ்களின் ஈரப்பதம்
‘இச்’ என்ற சத்தத்துடன்.

-ஷேக் அப்துல்லா