நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது Version 2.0

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முழுசா 3 வருஷம் இருக்கு, இந்த 3 வருஷத்துல எவ்வளோ மக்கள் பணி ஆற்றலாம், எவ்வளவோ விஷயத்துக்கு குரல் கொடுக்கலாம், அரச எதிர்த்து போராட்டம் பண்ணலாம், குறைந்த பட்சம் கமல் அளவுக்கு ட்விட்டரில் புரட்சியாவது (லொள்) பண்ணலாம்.

Continue reading

Advertisements

நான் மதிக்கும் ஒரு அரசியல் தலைவர் : ஆர்.நல்லகண்ணு

image

நான் மதிக்கும் ஒரு சில அரசியல் தலைவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஐயாவும் ஒருவர்.

“என்றும் எளிமை” இது தான் அவரோட அடையாளம், மிக சிறந்த மனிதர், ரொம்ப நல்லவரா இருக்குறதுனால தமிழக மக்கள் நிரந்தரமா அவர கண்டுக்குறது இல்ல.

1929 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர்,தனது 15வது வயதில் தன்னை கம்யூனிச சித்தாந்தத்தோடு இணைத்துக் கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்கள் பிரச்சனைக்காக எந்த ஒரு “சுய விளம்பரமும்” இல்லாம போராடியவர்.இன்றும் கட்சி தருகிற சொற்ப மாத சம்பளத்தில் தன் தேவைகளைப் சுருக்கிக்கொண்டு மக்களக்காக பாடுப்பட்டு வருகிறார். ஒரு தலைவன் எப்படி எளிமையாக ,ஒழுக்கமாக, கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதற்க்கு இவரை விட சிறந்த எடுத்துக்காட்டு இருந்துவிட முடியாது.

Continue reading