அவள் – பாகம் 2

‘அவள்’ முதல் பாகம் படிக்காதவர்கள் , முதல் பாகம் படித்துவிட்டு தொடரவும் https://minthuligall.wordpress.com/tag/avall

– –  அவள் 2 – – 

அவனிடம் உண்மையை சொன்னதும் எதுவும் பேசாமல் விடு திரும்பினான்.

குற்றவுணர்வு  தலை தூக்கினாலும் தலை குனியாமல்  வீடு திரும்பினேன் , அவன் நியாபாகத்தோடு.

அவனிடம் உள்ளதை கூறிய போது அவன் முகம் சுழிக்கவில்லை முகம் சுளிக்காமல் என் அடையாளத்தை உள்வாங்கிய முதல் மனிதன் இவன் ஒருவனே.

Continue reading

அவள் – பாகம் 1 

1475911305575.png

நான் ‘அவள்’ என்று நினைத்து, அவன் தன் காதலை இன்று சொல்லிவிட்டான்

ஆனால் நான்,அவனாக பிறந்து அவளாக மாறியவள் என்று அவனுக்கு தெரியாது.என்னுள் பெண்மை முழு பரிமாணம் அடைந்ததார்க் காண  சான்று இது.

உண்மையை சொல்ல வேண்டும் என்று மனம் பலமுறை விரும்பினாலும்,அவன் என்னை அவளாக ஏற்றுகொண்ட பின் தவறென்று உறுத்தவில்லை.

Continue reading

ஓர் கனவு : விடியல்

image

அதிகாலை சூரியன் சோம்பல் முறிக்க;
மணலின் துயில் களையாமல்
கடல் காற்று வீச;
உறங்காத கிரக்கத்தில்
கடல் அலைகள் பாதம் நனைக்க;
நண்டுகள் தம் துளை விட்டு
நம் வரவை எட்டி பார்க்க…

குளிரை விரட்ட
மௌனத்தை இறுக்க
போர்த்திக் கொண்டு;
இதழ்கள் சேர்த்து , விரல்கள் கோர்த்து
முடிவு தெரியாத கடல் கரையின்
முடிவைத் தேடும் நடையில்
பல யூகம் வாழ்கிறோம்
அந்த ஒரு விடியலில்
நாம்.

ஷேக் அப்துல்லா

“சாயம்”

image

காகம் தொட்டாலும் வானவில் சாயம் போவதில்லை!
ஆனால் மூடர் மட்டும் இன்றளவும் மனிதருள்

சாயம் காண்கிறார்கள்! எப்போது நிறந்தரமாகுமோ
அந்த முண்டாசு கவியின் சிந்தனைகள்!!

-சந்திரகணேஷ்

மப்பு பாட்டு

image

அடிக்கிற beerku
தெரியும டி.. உன்னால
நான் அடைஞ்ச போதை

Side டிஷ் இல்லாத கடைசி ரவுண்டில்
நீ தாண்டி என் நாக்கில்
கரையும் ஊறுகாய்.

அடுத்த ரவுண்ட தேடும் 
புத்திய போல,உன்ன தேடுது என் மனசு

Continue reading