இனப்படுகொலை

ஆசை வார்த்தையை நம்பி
துரோகத்தால் மடிந்து;
குருதி தெறிக்க, தோலுரித்து
தலையிழந்து, உடலிழந்து
இனமிழந்து, உறவிழந்து
எதிரியின் சட்டியில்
குழம்பாக மிதந்தது
மீன்.

– ஷேக் அப்துல்லா