அதுங்க ரொம்ப ரொம்ப மோசமான விலங்கு

image

“அப்பா அப்பா, அதோ அந்த தூரத்து பள்ளத்துல புதுசா ஒரு வெளிச்சம் தெரியுதுல அது என்னதுப்பா,அங்க நாம போலாமா”னு கேட்டதும்

“அங்க ரொம்ப மோசமான விலங்குலாம் இருக்கும் குட்டிப்பாப்பா ,அதுங்க நம்மால அடிச்சு கொன்னுடும், எக்காரணத்தக்
கொண்டும் அங்க நாம போகவே கூடாது”னு அதிர்ந்த குரலில்
ரொம்ப கண்டிப்போட என் அப்பா சொன்னாரு. அத கேட்டதும் எனக்குள்ள பயம் கலந்த ஒரு அதீத ஆவல் எழுந்தது, இருந்தும் வெளிய காட்டிக்காம “சரிப்பா நா அங்க போக மாட்டேன்”னு அப்பாக்கும் அம்மாக்கும் உத்திரவாதம் கொடுத்தேன்.

Continue reading

மறுபடியும் முதல்ல இருந்தாஆஆ

image

இரவு நேர நீண்ட
பேருந்து பயணம்.

எதிர் இருக்கையில்
குட்டி பெண் குழந்தையுடன்
ஒரு தம்பதியனர்.

பெண் குழந்தை என்றால்
ரொம்ப பிரியம் எனக்கு ;
ஆசை அடங்காமல் குழந்தையின்
கவனம் ஈர்க்க செய்கை செய்தேன்.

அபார திறமையால் குழந்தையின்
கவனத்தோடு அவள் தந்தையின் 
கவனத்தையும் ஈர்த்துவிட்டேன்.

அவர் அவளிடம் “மாமா”க்கு
“தாட்டா காட்டு” என்று சொல்ல
அழகு தேவதையாய் “மாமா” என்று சொல்லி கையோடு தலையையும் சேர்த்து ஆட்டினாள்.

Continue reading

என்ன கொடும சரவணா….

image

பொறந்ததுல இருந்து என்
கூடவே இருந்தாலும்
அதிகம்  பேசாத என் ‘சமூகம்’ ;
நா வயசுக்கு வந்த அடுத்த நிமிஷமே நிறைய பேச ஆரம்பிச்சுது…

பல நேரம் காமம் கலந்த காதல் கதை;
சில நேரம் ஆசைய தூண்டும் பணக் கதை;
சில நேரம் குழப்பம் நிறைந்த பக்திக் கதை;
அப்பப்ப தெளிவு இல்லாத அரசியல் கதை;
ஆனா எந்த கதை சொன்னாலும் என்டர்டைன்மெண்ட்  நிச்சயம் இருக்கும்.

Continue reading

தந்தைமொழி

thanthanimozhi
சில நிமிடக் கதை : தந்தைமொழி

ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வு முடிஞ்சு லீவ்ல நண்பர்களோடு விளையாடிக்கொண்டு இருந்த நேரம் , ஒன்பதாம் வகுப்பு என்பதால், தேர்வு முடிவுக்காக பெருசா கவலை படல, நிச்சயம் “பாஸ்”னு ஜாலிய சுத்திட்டு இருந்தப்ப தான் , அந்த மஞ்ச கலர் போஸ்ட் கார்டு வீட்டுக்கு வந்துச்சு. போஸ்ட கார்ட பார்த்ததும் என் அப்பா முஞ்சி வாடி போச்சு,

என்கிட்ட எதுவும் சொல்லாம, ஸ்கூல் ப்ரின்சிப்பல் ரூம்க்கு என்ன கூட்டிட்டு போனாரு, அங்க போன கொஞ்ச நேரத்துலையே எனக்கு தெரிஞ்சுட்டு , நம்மல 9th STDல DE-PROMOTE பண்ணிடாங்கனு.

ஸ்கூல் ப்ரின்சிப்பல் எங்க அப்பா கிட்ட,

Continue reading

ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளை???

image

என் பிறப்பிற்கான சூழல் உருவாக்கபட்ட கையோடு 
என் மதிப்பும் ஊர்ஜினம் 
செய்யப்பட்டது; 
ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாய்
நான் பிறந்தேன்

நான் தனியே பிறக்கவில்லை
அண்ணன், தங்கை,மச்சான் மற்றும்
தூரத்து உறவுகளுடன் சேர்ந்து பிறந்தேன்

நான் பிறந்ததும் என்னை கையில் தூக்கி கொஞ்ச செல்வந்தர்களும் வியாபாரிகளும் செல்வாக்கு மிக்கவர்களும் போட்டிப்போட்டுக் கொண்டார்கள்

Continue reading

ஒரு நிமிட கதை : சந்தர்ப்பம்

santharppam

“காலைல இருந்து ரெண்டு வீட்டுல துணி துவைச்சாச்சு,இன்னும் மூணு வீடு தான் பாக்கி, சிக்கிரம் துவைச்சி முடிச்சா ரேஷன் கடைக்கு போகலாம்”னு யோசிச்சுட்டே மீனம்மா நடந்து போயிட்டு இருந்தாள், அவளோட பழைய மொபைல் சத்தமா அலற ஆரம்பிச்சது, போன்ன எடுத்ததும் , பேரன் குரல்

Continue reading

ஒரு நிமிட கதை : பொக்க வாய் எல்லாம் பல்லு !!!

Untitled

செம்மஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு எங்க அப்பாவுக்காக காலேஜ் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நல்ல வெயில், எனக்கு பக்கத்துல இருந்த கருப்புசாறு கடைல செம்ம கூட்டம் , தாத்தா ரொம்ப மும்முரமா வேல செஞ்சிட்டு இருந்தாரு, வந்தவங்க எல்லாருக்கும் கரும்புச்சாறு குடுத்துட்டும்,அடுத்து வெயிட் பண்றவங்களுக்குக்காக கரும்பா அறைச்சுட்டும் தாத்தா வழகத்த விட ரொம்ப பிஸியா இருந்தாரு,

Continue reading