ரெட்டை மாட்டுவண்டி கிழவன்

1495239452928~01

தலைகாட்டி வெகுநாள் ஆனதால்
சொந்தவுரில் அந்நியப்பட்டு நின்றேன்
நடு ஜாமத்தில்.

ரயில்வண்டி கிளம்பியதும் ஸ்டேஷனில் நிசப்தம் சூழ்ந்தது
ஊருக்கு செல்ல வண்டியுமில்லை,
அழைப்பு குடுக்க போனில் பேட்டரியுமில்லை
பேப்பரில் படித்த செய்திகள் ஒவ்வொன்றாய்
நினைவில் வர உடல் நடுங்கியது.

Continue reading

நேசநே தேடாதே…

இந்த வரிகள் மாலைமாற்று (Palindrome) சொற்களால் எழுதப்பட்டது.

குறிப்பு : மாலைமாற்று என்பது எந்த திசையில் இருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல், தமிழில் மொத்தம் 21க்கும் குறைவான Palindrome வார்த்தைகள் தான் உள்ளன.


– ஷேக் அப்துல்லா

களவு

வளையல் சத்தம் கேட்டதும்
முழித்து கொண்டேன்,

அரை தூக்கத்தில்
அறை ஓரத்தில் அரையும்
குறையுமா அவளை பார்த்தேன்..

வேகவேகமாக உடை அணிந்து
கொண்டே ‘நான் கிளம்புறேன் என்
பணத்தை குடு’ என்றாள்

Continue reading

அவள் – பாகம் 2

‘அவள்’ முதல் பாகம் படிக்காதவர்கள் , முதல் பாகம் படித்துவிட்டு தொடரவும் https://minthuligall.wordpress.com/tag/avall

– –  அவள் 2 – – 

அவனிடம் உண்மையை சொன்னதும் எதுவும் பேசாமல் விடு திரும்பினான்.

குற்றவுணர்வு  தலை தூக்கினாலும் தலை குனியாமல்  வீடு திரும்பினேன் , அவன் நியாபாகத்தோடு.

அவனிடம் உள்ளதை கூறிய போது அவன் முகம் சுழிக்கவில்லை முகம் சுளிக்காமல் என் அடையாளத்தை உள்வாங்கிய முதல் மனிதன் இவன் ஒருவனே.

Continue reading

அவள் – பாகம் 1 

1475911305575.png

நான் ‘அவள்’ என்று நினைத்து, அவன் தன் காதலை இன்று சொல்லிவிட்டான்

ஆனால் நான்,அவனாக பிறந்து அவளாக மாறியவள் என்று அவனுக்கு தெரியாது.என்னுள் பெண்மை முழு பரிமாணம் அடைந்ததார்க் காண  சான்று இது.

உண்மையை சொல்ல வேண்டும் என்று மனம் பலமுறை விரும்பினாலும்,அவன் என்னை அவளாக ஏற்றுகொண்ட பின் தவறென்று உறுத்தவில்லை.

Continue reading

Parallel காதல்  

image

# கிரகம் P331K #
நேரம் : 6.00 PM

இன்னைக்கு முடிவா என்னதான்
செல்றானு கேட்டே ஆகணும் என்று நினைத்தவாறு அவன் அவள் அலுவலகத்தின் வாசலில் காத்துகொண்டு இருந்தான்.

அவள் வந்ததும், வழக்கத்தை விட சற்று படப்படப்போடு அவளை அணுகியவன்.

“முடிவா என்ன தான் சொல்ற,நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ? “,அவன்

“எனக்கு உன்ன புடிக்கும்.. ரொம்ப”, அவள்

“பின்ன எதுக்கு தயங்குற ? “, அவன்

“எனக்கு இன்னமும் உன்ன கஷ்ட

படுத்திட்டு இருக்க புடிக்கல , நானும் நிறைய தடவ உன்கிட்ட சொல்லிட்டேன் , எனக்காக வெயிட் பண்ணாத

நீ போயிடு,இது நடக்காது…”, அவள்

Continue reading

அதுங்க ரொம்ப ரொம்ப மோசமான விலங்கு

image

“அப்பா அப்பா, அதோ அந்த தூரத்து பள்ளத்துல புதுசா ஒரு வெளிச்சம் தெரியுதுல அது என்னதுப்பா,அங்க நாம போலாமா”னு கேட்டதும் 

 “அங்க ரொம்ப மோசமான விலங்குலாம் இருக்கும் குட்டிப்பாப்பா ,அதுங்க நம்மால அடிச்சு கொன்னுடும், எக்காரணத்தக்
கொண்டும் அங்க நாம போகவே கூடாது”னு  அதிர்ந்த குரலில்
ரொம்ப கண்டிப்போட என் அப்பா சொன்னாரு. அத கேட்டதும் எனக்குள்ள பயம் கலந்த ஒரு அதீத ஆவல் எழுந்தது, இருந்தும் வெளிய காட்டிக்காம “சரிப்பா  நா அங்க போக மாட்டேன்”னு அப்பாக்கும் அம்மாக்கும் உத்திரவாதம் கொடுத்தேன்.

Continue reading