மகளதிகாரம் 4 – சர்ப்ரைஸ்

நைட் கேக் வெட்டியாச்சு
நாளைக்கு அம்மாக்கு என்ன
பரிசு குடுக்க போற என்று
இருட்டில் hussky வாய்ஸில்
கேட்ட மகளுக்கு கம்மல் வாங்கி வெச்சுருக்கேன் என்று நானும்

அதே hussky வாய்ஸில் பதில் அளித்தேன்.
கம்மல்லாம் ஒரு கிப்ட்டாப்பா என்று
இருட்டில் கண் சிமிட்டினாள்,
பின்ன வேற என்ன குடுக்கலாம் என்று கேட்டதற்கு.

என் போர்வைக்குள் வந்தவள்,
தூங்கிகொண்டு இருக்கும் அவள் அம்மாவுக்கு கேட்காதவாறு
“நாமா நாளைக்கு அம்மாக்கு சர்ப்ரைஸ்
கொடுப்போம்” என்று ரெண்டு கையையும் விரித்து செய்கை செய்தாள்

சரி என்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம்
என்றதற்கு,ரெண்டு நிமிஷம் அவள்
நாடியில் கையை வைத்து யோசித்தாள்
நானும் அவளுடன் சேர்ந்து யோசிப்பது போல் நடித்துக் கொண்டே

அவள் செய்கையை ,மொபைல் வெளிச்சத்தில் ரசித்தேன்.

சட்டென்று என்னை பார்த்தவள்,
“அம்மா நாளைக்கு முழிக்குறதுக்கு முன்னாடியே நாம பிரேக்பாஸ்ட்

ரெடி பண்ணலாமா” என்றாள்
சரி என்று சொல்லி முடிப்பதற்குள்
என்ன பண்ணலாம் என்று அடுத்த
கேள்வியை கேட்டாள்.
இப்பவே ரொம்ப லேட்டாயுட்டு
காலைல பேசலாம் என்று சொல்லி
அவளை தூங்க சொன்னேன்.

சரி என்று தலையை ஆட்டியவள்
“காலைல சீக்கிரம் எழுப்பி விடுப்பா,
அம்மா முழிக்குறதுக்கு முன்னாடியே
நாம முழிக்கனும்” என்று கட்டளையிட்டு
தூங்க சென்றாள், சரி என்று சொல்லி என் தங்கத்தின் நெத்தில் முத்தா குடுத்து நானும் தூங்கினேன்.

“அப்பா அப்பா” என்று வேகமாக என்னை எழுப்பினாள், முழித்து பார்த்தேன் மணி ஒன்பது. “ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போடாத அம்மா இன்னும் முழிக்கல,போச்சு நாம நல்ல தூங்கிட்டோம்,சீக்கிரம் வாப்பா”

என்று செய்கை செய்து சமையல் அறைக்குள் ஓடினாள்.

ஐந்து நிமிட யோசனைக்கு பின்,
முட்டை ஆப்பம் செய்யலாம்
என்ற முடிவுக்கு வந்தோம்.
“நான்” தான் எல்லாம் செய்வேன்
என்று மாவில் முட்டையை ஊற்றி
சக்கரை போட்டு கலங்கினாள்.

நிதானமாக முதல் நான்கு ஆப்பம் ஊற்றியவள், பின் “ஹாப்பி பர்த்டே அம்மா” என்று எழுத முயற்சி செய்து
ஒரு விசித்திர கோணத்தில் ரெண்டு
ஆப்பம் தயார் செய்தாள்.

அவள் அம்மா முழித்த சத்தம் கேட்டதும்
அவசர அவசரமாக ஆப்பத்தின் மேல்
நெய்யை தடவி, தட்டில் வைத்து
அவள் தலைமையில் பெட்ரூம்க்கு
எடுத்துச் சென்றோம்.

தட்டும் கையுமாக எங்களை
பார்த்த கணமே என் மனைவிக்கு
புரிந்து விட்டது, எதோ அசம்பாவிதம்
நடந்து இருக்கிறது என்று.
இருந்தும் அவள் முகத்தில் ஒரு ஆவா.

தட்டை திறந்தவள் ,வாய் அடைத்துபொய் விழித்தாள்.என் தங்கம் “சர்ப்ரைஸ் மா ” என்று கொஞ்சும் மொழியில் ஆர்ப்பாட்டம் செய்து அவள் அம்மாக்கு ஆப்பம் ஊட்டிவிட்டு முத்தமும் வாங்கி கொண்டாள்.நான் மறைவில் நின்று நடப்பதை புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.ஓடி வந்து எனக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டாள் என் அழகு செல்லம்.

பின் என் காதோரம் வந்து,
“அப்பா நல்ல வேல அம்மா சீக்கிரம் முழிக்கல”என்று சொல்லி கலகலவென சிரித்தாள், நான் திரும்பி என் மனைவியை பார்தேன் அவளும் என்னை பார்த்தாள், அமைதியா சிரித்துக் கொண்டோம். மகளுக்கு தெரியாமல்.

– ஷேக் அப்துல்லா

———————————-

மகளதிகாரம் – தங்க வார்த்தை ( பாகம் – 1)
மகளதிகாரம் – பொம்மை ( பாகம் 2)
மகளதிகாரம் – முதல் பிரிவு !!! ( பாகம் – 3)

Click : https://minthuligall.wordpress.com/tag/magalathigaram/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s