எது அத்தியாவசியம்..?

18740682_10213186961259016_545160307475894606_n

உலக நாடுகள் எல்லாம் Sanitary Napkin மீதுள்ள வரியை முற்றிலும் அகற்றிவரும் நிலையில், இந்த வருட சரக்கு மற்றும் சேவை வரிகளில் Sanitary Napkin மீது 12% வரியை விதித்துள்ளது இந்தியா அரசாங்ம்.

2011யில் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வேவின்படி இந்தியப் பெண்களில் வெறும் 12% தான் Sanitary Napkinகளை பயன்படுத்தி வருகிறார்கள், மீதமுள்ள 88% கிராமத்து மற்றும் மலைவாழ்
பெண்கள் இன்னமும் பழைய துணி , பேப்பர் மற்றும் இலைகளை தான் பயன்படுத்தி வருகிறார்கள். கலாசாரம் நாகரிகம் என்று மார்தட்டிக் கொண்டு இருக்கும் இந்த நாட்டில் தான் பீர் பாட்டிலை மறைக்காமலும் Sanitary Napkin, Condomயை கருப்பு கவரில் மறைத்து ஒளித்து ஏதோ தீண்டத்தகாத
பொருளை போல் அணுகும் அவலம் நிகழ்கிறது. ஸ்டேபிரீ விளம்பரம் போட்டதும் சேனலை மாத்தும் வீடுகளும் இங்குவுண்டு, சாதாரண ஒரு விஷயத்தை சரியாக அணுகமால் விட்டதால் தான் 33 கோடி இந்தியப் பெண்கள்
இன்னமும் சுகாதாரம்யில்லாமல் இருக்கிறார்கள்.

இங்கு பிரச்சனை காசு மட்டும்யில்லை, விழிப்புணர்வும் தான். நிறைய கிராமங்களில் Sanitary Napkin கிடைப்பதில்லை, மேலும் அதன் அவசியத்தை பெண்களுக்கு எடுத்து சொல்லும் விழிப்புணர்வு ஏற்பாடுகளும்
இங்குயில்லை.இனி வரும் ஆண்டுகளிலாவது இது குறித்து நாடு முழுவதும் மிகப்பெரிய விழிப்புணர்வு செய்து முற்றிலும் வரி விளக்கு அளித்து தேவையுள்ள இடங்களில் அரசே இலவசமாக வழங்கவேண்டிய இந்த தருணத்தில் தான் 12% வரி விதித்து நம்மை அசத்திவிட்டது நம் அரசாங்கம்.

சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிவுள்ள ஒரு நாடு பெண்களின் அடிப்படை தேவைக்கு 12% வரிவிதித்துவிட்டு, சொகுசு சார்களின் வரிகளை 55%யில் இருந்து 40-43%மாக குறைத்திருப்பது வெட்கக்கேடான ஒரு செயல்.
24 மணி நேரமும் பேஸ்புக்யில் சமையல் , பியூட்டி டிப்ஸ் வீடியோக்களை ஷேர் செய்யும் பெண்கள் கூட இந்த விஷயம் குறித்து விவாதம் செய்யாமல் இருப்பதுதான் ஆச்சரியம்,வருத்தம்.

– ஷேக் அப்துல்லா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s