ரெட்டை மாட்டுவண்டி கிழவன்

1495239452928~01

தலைகாட்டி வெகுநாள் ஆனதால்
சொந்தவுரில் அந்நியப்பட்டு நின்றேன்
நடு ஜாமத்தில்.

ரயில்வண்டி கிளம்பியதும் ஸ்டேஷனில் நிசப்தம் சூழ்ந்தது
ஊருக்கு செல்ல வண்டியுமில்லை,
அழைப்பு குடுக்க போனில் பேட்டரியுமில்லை
பேப்பரில் படித்த செய்திகள் ஒவ்வொன்றாய்
நினைவில் வர உடல் நடுங்கியது.

குலசாமியை நினைத்து கொண்டே
இருட்டை வெறித்து பார்த்து கொண்டு இருந்தேன்
தூரத்தில் ஜல்ஜல் என்று சலங்கை ஒலி கேட்டது.
வருவது பேய்யோ பிசாசோ என்று கலங்கிய பொழுது
எதிரே தோன்றினான் கிழவன் ரெட்டை மாட்டு வண்டியோடு;

குலசாமியை கண்டது போல கும்பிட்டு வணங்க
மனம் குனிந்தாலும் உடல் குனியவில்லை;
எங்கே போகணும் தாயீ என்று கேட்ட
கிழவனுக்கு விலாசத்தை சொல்லி வண்டியில் அமர்ந்தேன்;
வீட்டில் இறங்கியதும் கையில் இருந்த
ரொக்கபணம் முழுவதையும் குடுக்க வேண்டும் என்று தோன்றியது.
மானம் காத்த புனியவான் அல்லவே
இந்த கிழவன் என்று மனம் அசைபாடிக் கொண்டே இருந்தது
வண்டியின் ரெட்டை மாட்டுகளின் வாயைப் போல்.

ஊர் எல்லைக்குள் வண்டி நுழைந்ததும்
மாட்டு வாலைப்போல் மனம் ஆட ஆரம்பித்தது.எதர்ச்சையாய் வந்த
கிழவனுக்கு இவ்வளவு ரொக்கம் ஜாஸ்திதான், சில்லறை கொஞ்ச
கொடுப்பது தான் நியாயம்
என்றது மனம்.

தெரு எல்லைக்குள் வண்டி நுழைந்ததும், கிழவன் வராவிட்டாலும்
வேற யாரோ வந்து கூப்பிட்டு சென்றுயிருப்பார்கள்,
நம்ம ஊரு என்ன அவ்வளவு மோசமா ? என்று மனம் வினாவிக் கொண்டு
இருக்கும் போதே வீட்டின் முன்
வண்டியை நிறுத்தினான் கிழவன்.

கீழே இறங்கியதும் பழைய சோறு வேணுமா தாத்தா என்றேன்; எதுவும் சொல்லாமல் சிறிய சிரிப்போடு இருளில் மறைந்தான் கிழவன்

ரெட்டை மாட்டோடுகளின் ஜல்ஜல் ஒளியோடு

– ஷேக் அப்துல்லா

http://www.minthuligal.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s