ரெட்டை மாட்டுவண்டி கிழவன்

1495239452928~01

தலைகாட்டி வெகுநாள் ஆனதால்
சொந்தவுரில் அந்நியப்பட்டு நின்றேன்
நடு ஜாமத்தில்.

ரயில்வண்டி கிளம்பியதும் ஸ்டேஷனில் நிசப்தம் சூழ்ந்தது
ஊருக்கு செல்ல வண்டியுமில்லை,
அழைப்பு குடுக்க போனில் பேட்டரியுமில்லை
பேப்பரில் படித்த செய்திகள் ஒவ்வொன்றாய்
நினைவில் வர உடல் நடுங்கியது.

Continue reading

நேசநே தேடாதே…

இந்த வரிகள் மாலைமாற்று (Palindrome) சொற்களால் எழுதப்பட்டது.

குறிப்பு : மாலைமாற்று என்பது எந்த திசையில் இருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல், தமிழில் மொத்தம் 21க்கும் குறைவான Palindrome வார்த்தைகள் தான் உள்ளன.


– ஷேக் அப்துல்லா

களவு

வளையல் சத்தம் கேட்டதும்
முழித்து கொண்டேன்,

அரை தூக்கத்தில்
அறை ஓரத்தில் அரையும்
குறையுமா அவளை பார்த்தேன்..

வேகவேகமாக உடை அணிந்து
கொண்டே ‘நான் கிளம்புறேன் என்
பணத்தை குடு’ என்றாள்

Continue reading

உன்னை தேட போவதாயில்லை..

உன் நினைவு துளியளவுமில்லை,
கனவிலும் நீயில்லை,
நிஜத்திலும் நீயுடனில்லை

தேடும் யென்னமுமில்லை ;
தீண்டும் யென்னமுமில்லை
துளைத்தவர்கள் தான் தேடுவார்கள்.

எட்டிப் பார்க்க முடியாத தூரத்தில்
நீயிருந்தாலும் காதோரம் உன் மூச்சுக்காற்று
ரீங்காரம் செய்து கொண்டு இருக்கும் பொழுது

உன்னை தேடுவது எவ்வளோ
பெரிய முட்டாள் தனம் ;
நிச்சயம், உன்னை தேட போவதாயில்லை

– ஷேக் அப்துல்லா