அறத்தால் அடிப்போம்

ஒரு போராட்டத்தின் வெற்றி என்பது, அந்த போராட்டம் எவ்வளவு பெரிய தாக்கத்தை விட்டு சென்றது என்பதில் தான் இருக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியை பார்த்து அண்டை மாநிலங்களும் தங்கள் கலாச்சார உரிமைக்கு குரல் கொடுத்தத் தொடங்கியுள்ளன.
ஜல்லிக்கட்டை போலவே  கர்நாடகத்தி்ன் ‘கம்பளா’ போட்டியும் PETAவால் 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டு இருந்தது, அந்த தடையை நீக்க வேண்டுமென கம்பளா கமிட்டி அறிவித்துள்ளது. ஜனவரி 28ம் தேதி மத்திய கர்நாடக பகுதியில் உள்ள முத்பத்திரி என்ற இடத்தில் இதற்காக மிகப் பெரிய போராட்டம் நடைபெறவுள்ளது.

இதைப்போல் ஆந்திராவின் சேவல் சண்டைக்கும் ,அசாமின் ”புல் புல்” குருவிகள் சண்டைக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழுந்துவருகிறது. அலங்கநல்லூரில் விதைக்கப்பட்ட விதை அசாம் வரை பரவியது தான், ‘மெரினா போராட்டத்தின்’ மாபெரும் வெற்றிக்கான அடையாளம்.

1965யில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கும் மெரினா போராட்டத்திற்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் முக்கியமான வேற்றுமை ஒன்று உள்ளது, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின் பலமான அரசியலும், அரசியல் தலைவர்களும் இருந்தார்கள், ஆனால் மெரினா போராட்டத்தில் மாணவர்கள் ஆரம்பத்திலேயே அரசியல் தலைவர்களை முற்றிலும் தவிர்த்து விட்டார்கள்.இந்த செயலை அவ்வளவு எளிதாக நினைத்து விட முடியாது காரணம், அணைத்து கட்சிகளையும், கட்சிகளின் தொண்டர்களையும், பெரியாரிஸ்ட்களையும்,ஜாதி,மதவாதிகளையும் புறம் தள்ளிவிட்டு, அவர்கள் குடுக்கும் குடைச்சலையும் சமாளித்து விட்டு 7 நாட்கள் தமிழகம் மற்றும் அல்லாமல் உலகம் முழுவதும் ‘அறத்தை’ மட்டுமே முன்னிறுத்தி போராடியது தான் இந்த போராட்டத்தின் சிறப்பு.
இன்னமும் சிலர் இது ஜல்லிகாட்டிற்காக மட்டுமே கூடிய கூட்டம் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்,நம்மை சுற்றி நடந்த/நடக்கும் பல  அரசியல் விரும்பத்தகாத சகிக்கதகாத சம்பவங்களின் அழுத்தமே இந்த போராட்டத்தின் வெளிபாடு.காந்தி ‘ராட்டை’  முன்னிறுத்தியதைப் போல், மாணவர்கள் ‘மாட்டை’ முன்னிறுத்தி கூடினார்கள்.

களத்தில் Tasmac, காவேரி, விவசாயம், அந்நியத் தயாரிப்பு என்று அனைத்தும் விவாதிக்கப்பட்டது. அதன் தாக்கமே மெரினவை விட்டு மாணவர்கள் வெளியேறும் முன்னே Coke, Pepsiக்கு தமிழ்நாட்டில் முற்றுப்புள்ளிக்கான ஆரம்பப்புள்ளியை வணிகர் சங்சம் வைத்தது.
‘காலம்’  இந்த அறப்போராட்டத்தையும் அதன் வெற்றியை என்றும் மறக்காது.
‘அறத்தால் அடிப்போம்’
– ஷேக் அப்துல்லா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s