தனிமனித கருத்தை வெளிபடுத்தும் களமாக இருந்த “சமூக ஊடகம்” இப்பொழுது தனிமனித கருத்தை சீண்டி பார்க்கும் ஆயுதமாக மாறி இருக்கிறது என்பது மிகப்பெரிய வேதனை.
சமூக ஊடகத்தை உபயோகபடுத்தும் அளவுக்கு நாம் இன்னமும் பக்குவப்படவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான மூன்று காரணம்,
ஒன்று, வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகமானது சந்தோஷம் தான் என்றாலும், 90% சதவீதம் பேர் வெறும் “நுனிப்புள்” மேயுற கூட்டமா இருக்குறது தான் இங்க பெரிய பிரச்சனை.
இரண்டு, சகிப்புத்தன்மை குறைந்து கொண்டும் மறதி கூடிக் கொண்டும் இருக்கிறது.
மூன்று, பல வருட உபயோகத்திற்கு பின்பும் “அளவற்ற சுதந்திரத்தை” கையாளத் தெரியாத கையாலாதவர்களாக நாம் இருக்கிறோம்.
மதம்,இனம்,மொழி,இசை,கலாசாரம்,பண்பாடு இது எல்லாவற்றை விடவும் ஒரு “தனி மனித” கருத்துக்கு மதிபளிப்பதே ஒரு உயர்ந்த சமூகத்திற்க்கு அழகும் பெருமையும். அப்படி மதிப்பளிக்காத சமூகம் வெறும் ஓங்கி உயர்த்த குப்பை குவியலே.
– ஷேக் அப்துல்லா