அறத்தால் அடிப்போம்

ஒரு போராட்டத்தின் வெற்றி என்பது, அந்த போராட்டம் எவ்வளவு பெரிய தாக்கத்தை விட்டு சென்றது என்பதில் தான் இருக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியை பார்த்து அண்டை மாநிலங்களும் தங்கள் கலாச்சார உரிமைக்கு குரல் கொடுத்தத் தொடங்கியுள்ளன.
ஜல்லிக்கட்டை போலவே  கர்நாடகத்தி்ன் ‘கம்பளா’ போட்டியும் PETAவால் 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டு இருந்தது, அந்த தடையை நீக்க வேண்டுமென கம்பளா கமிட்டி அறிவித்துள்ளது. ஜனவரி 28ம் தேதி மத்திய கர்நாடக பகுதியில் உள்ள முத்பத்திரி என்ற இடத்தில் இதற்காக மிகப் பெரிய போராட்டம் நடைபெறவுள்ளது.

Continue reading

​’தலைமை’  வேண்டாம்…

‘தலைமை’ இல்லாதது தான்
இந்த போராட்டத்தின் அழகு,

‘தலைமை’ இல்லாதது தான்
இந்த போராட்டத்தின் தனித்துவம்,

‘தலைமை’ இல்லாதது தான் 
இந்த போராட்டத்தின் பலம்,

நம் பிரதிநிதியாக ஒற்றை தலைவரை முன்னிறுத்த வேண்டாம்..

மொத்த தலைமுறையையும் முன்னிறுத்துவோம்.

– ஷேக் அப்துல்லா
#jallikattu

இன்றைய சமூகஊடகமும், தனி மனிதனும்..

தனிமனித கருத்தை வெளிபடுத்தும் களமாக இருந்த “சமூக ஊடகம்” இப்பொழுது தனிமனித கருத்தை சீண்டி பார்க்கும் ஆயுதமாக மாறி இருக்கிறது என்பது மிகப்பெரிய வேதனை.

சமூக ஊடகத்தை உபயோகபடுத்தும் அளவுக்கு நாம் இன்னமும் பக்குவப்படவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான மூன்று காரணம்,

Continue reading