குட் பை காஸ்ட்ரோ..

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார்.

இவர் மேல் , CIA மற்றும் அதிகார வர்கத்தால் 638 முறை கொலை முயற்சி நடத்தப்பட்டது. ஒலிம்பிக்கில் “கொலை முயற்சியில் இருந்த அதிகம் தப்பியவர்களுக்கு” பதக்கம் கொடுத்தால், நான் தான் எப்போதும் தங்கம் வாங்குவேன் என்று சிரிப்போடு செல்லியவர்.
இவர் மோதியது குப்பனோ , சுப்பனோயில்லை உலகின் சூப்பர்பவர் அமெரிக்காவோடு அதுவும் வெறும் 100km தூரத்தில் இருந்துகொண்டே , கியூபாவின் மேல் பொருளாதார தடை விதித்தபோதும் கூட தன் அதிகார வர்க்க எதிர்ப்பை தொடர்ந்தார்.

50 வருட பொருளாதார தடையையும் மீறி ஒரு நாட்டை வளர்ச்சி அடைய வைத்தது காஸ்ட்ரோ ஒருவராக தான் இருக்க முடியும். அதுவும் கியூபா போன்ற ஒரு சின்ன தீவு வெறும் கரும்பு விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஒரு தீவை வைத்துக் கொண்டு அமெரிக்காவிடம் மோதி வெற்றியும் கண்டதைத்தான் அமெரிக்காவால் இறுதிவரை ஜீரணிக்க முடியவில்லை.

இவர் ஆட்சி காலத்தில்,கல்வியும் மருத்துவமும் இலவசமாக வழங்கப்பட்டது. கியூபாவில் படிப்பறிவு பெற்றவரின் எண்ணிக்கை 90% சதவீதமாக இருந்தது. குறிப்பாக மருத்துவ துறையில் கியூபா உலகயிலேயே தலை சிறந்த நாடாக விளங்குகிறது.
கடைசி வரை அமெரிக்காவுக்கு சிம்மசொப்பணமாக இருந்த காஸ்ட்ரோ. இயற்கை மரணம் அடைந்து CIAவின் கொலைமுயற்சி அனைத்தையும் , கொலை செய்துவிட்டார்
குட் பை காஸ்ட்ரோ.

– ஷேக் அப்துல்லா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s