Parallel காதல்  

image

# கிரகம் P331K #
நேரம் : 6.00 PM

இன்னைக்கு முடிவா என்னதான்
செல்றானு கேட்டே ஆகணும் என்று நினைத்தவாறு அவன் அவள் அலுவலகத்தின் வாசலில் காத்துகொண்டு இருந்தான்.

அவள் வந்ததும், வழக்கத்தை விட சற்று படப்படப்போடு அவளை அணுகியவன்.

“முடிவா என்ன தான் சொல்ற,நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ? “,அவன்

“எனக்கு உன்ன புடிக்கும்.. ரொம்ப”, அவள்

“பின்ன எதுக்கு தயங்குற ? “, அவன்

“எனக்கு இன்னமும் உன்ன கஷ்ட

படுத்திட்டு இருக்க புடிக்கல , நானும் நிறைய தடவ உன்கிட்ட சொல்லிட்டேன் , எனக்காக வெயிட் பண்ணாத

நீ போயிடு,இது நடக்காது…”, அவள்

சிறிது நேரம் அமைதிக்குப்பின், அவன் அங்கிருந்து கிளம்பினான், அவளின் கடைசி வார்த்தைகளின் சத்தம் காதுகளில் எதிரோளித்தவாறு தன் பைக் acceleratorஐ வேகமாக முறுக்கினான்.

# கிரகம் P329K #
நேரம் : 6.00 PM

இன்னைக்கு முடிவா என்னதான்
செல்றானு கேட்டே ஆகணும் என்று நினைத்தவாறு அவன் அவள் அலுவலகத்தின் வாசலில் காத்துகொண்டு இருந்தான்.

அவள் வந்ததும், வழக்கத்தை விட சற்று படப்படப்போடு அவளை அணுகியவன்.

“முடிவா என்ன தான் சொல்ற,நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ? “,அவன்

“எனக்கு உன்ன புடிக்கும்.. ரொம்ப”, அவள்

“பின்ன எதுக்கு தயங்குற ? “, அவன்

“நா அல்ரெடி உன்ன ரொம்ப வெயிட் பண்ண வெச்சுட்டேன்,எனக்கு என் குடும்பமும் முக்கியம், அவங்கள கன்வீன்ஸ் பண்ண எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்”, அவள்

“சரி டைம் எடுத்துக்கோ,நா வெயிட் பண்றேன்,எனக்கு உன் கூட வாழனும் அதான் முக்கியம்”,அவன்

“இல்லடா உனக்கு புரியல,சப்போஸ் எங்க வீட்டுல கன்வீன்ஸ் ஆகாலனா, என்னால அவங்கல தூக்கிப்  போட்டுட்டு உன் கூட வரமுடியாது..அப்புறம் உன்ன…”..அவள் பேச்சைகக் குறுக்கிட்ட அவன்

“அப்புறம் என்ன இவளோ நாள் வெயிட் பண்ண வெச்ச “கில்ட்டி” பீல் உன்ன லைப்லாங் haunt பண்ணும் அதான சொல்ல போற”,”இத நீ என்கிட்ட ஆயிரம் தடவ சொல்லிட்ட ,எனக்கு வெயிட் பண்றதுல பிரச்சனையில்ல,உன் கூட வாழணும் 100 வருஷம் புரியுதா….”

அவள் எதுவும் பேசாமல்,தலை குனிந்து அழுதுகொண்டு இருந்தாள்,சிறிது நேர அமைதிக்குப்பின் அவன் அங்கிருந்து கிளம்பினான், அவளை முதலில் சந்தித்த நாளின் நினைவை அசைப்போட்டுக் கொண்டே தான் பைக் acceleratorai வேகமாக முறுக்கினான்.

# கிரகம் P315K #
நேரம் : 6.00 PM

இன்னைக்கு  முடிவா என்னதான்
செல்றானு கேட்டே ஆகணும் என்று நினைத்தவாறு அவன் அவள் அலுவலகத்தின் வாசலில் காத்துகொண்டு இருந்தான்.

அவள் வந்ததும், வழக்கத்தை விட சற்று படப்படப்போடு அவளை அணுகியவன்.

“முடிவா என்ன தான் சொல்ற,நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ? “,அவன்

“எனக்கு உன்ன புடிக்கும்.. ரொம்ப”, அவள்

“பின்ன எதுக்கு தயங்குற ? “, அவன்

“எனக்குன்னு சில பேமிலி கமிட்மெண்ட்ஸ் இருக்கு,அத நா முதல்ல முடிக்கணும், அதுக்கு கொஞ்சம் டைம் வேணும்,முடிவா என்ன செல்றானு கேட்டல? முடிவா சொல்றேன் ,நா தான் உன் பொண்டாட்டி,எவ்ளோ வருஷம் ஆனாலும் இதுதான் என் முடிவு,உங்களுக்கு வெயிட் பண்ண டைம் இருக்கா?,இல்ல சாருக்கு வேற எதாச்சும் proposal வந்துருக்கா?”,அவள் சிரித்தவாறு

“Byதிby ஐ am basically very பிஸி fellow,இருந்தாலும் நீ இவளோ கெஞ்சி கேட்டதுனால , Am Waiting உனக்காக”, அவன்

சிறிது நேர கொஞ்சளுக்குப்பின், தன் நீண்ட நாள் காதல் கை கூடிய சந்தோசத்தில்  அவளை முதன் முதலில் சந்தித்த இடத்திற்கு பைக்கில் அழைத்து செல்கிறான்.

# கிரகம் P331K #
நேரம் : 6.35 PM

அதீத வேகத்தால் , நிதானம் இழந்த அவன் விபத்தில் இறந்தான்.

# கிரகம் P329K #
நேரம் : 6.43 PM

அதீத வேகத்தால் , நிதானம் இழந்த அவன் விபத்தில் இறந்தான்.

…Parallel காதல்..

by,
ஷேக் அப்துல்லா.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s