உங்கள் ஓட்டை பிறர் ‘கள்ள’ ஓட்டாக போடுவதைத் தடுப்பதைத் தவிர NOTAவுக்கு(None Of The Above) என்று எந்த ஒரு “அமானுஷ்ய சக்தி”யும் கிடையாது.
உதாரணத்திற்கு 50,000 வாக்குகள் கொண்ட ஒரு தொகுதியில்,49,999 ஓட்டுகள் NOTAவுக்கும், 1 ஓட்டு கட்சி வேட்பாளருக்கும் பதிவானால், அந்த 1 ஓட்டு பெற்ற வேட்பாளரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
சரி,அப்ப NOTAவுக்கு என்னதான்யா பவர்னு கேட்குறீங்களா?,
சில நேரங்கள்ல வெற்றி சதவிதத்த தீர்மானிக்கிற சக்தி NOTAவுக்கு உண்டு, உதாரணத்திற்கு 50,000 வாக்குகள் கொண்ட ஒரு தொகுதியில் 25,000 ஓட்டுகள் தி.மு.கவுக்கும், 24,500 ஓட்டுகள் ஆ.தி.மு.கவுக்கும் பதிவாகியிருக்குனு வெச்சுப்போம்,இப்ப வெற்றிய தீர்மானிக்கப் போகிற மிச்ச 500 ஓட்டுல NOTA ஓட்டு இருந்தா அது மறைமுகமாக தி.மு.க வெற்றிக்கு வழிவகுக்கும்.
இவ்வளவு தான் NOTA. NOTA 35% பதிவாகி இருந்தால் மறுதேர்தல்,ஜனாதிபதி ஆட்சி,மானே,தேனே,பொன்மானேலாம் முழுக்க முழுக்க தரமான “கப்ஸா”.
– ஷேக் அப்துல்லா