???

image

அடர்ந்த காட்டில்
கூச்சலுக்கும் குழப்பத்திற்கும்
பிறந்த நான்,

முதலில் ஆங்காங்கே
ஒரு சில குழுக்களிடம் மட்டும்
அடைக்கலம் புகுந்தேன்

பின் குழுக்களிடம் இருந்து
ஒரு சில கிராமத்திற்கு
புலம்பெயர்ந்தேன்.
என் இருப்பின் அவசியம்
ஏழ்மைக்கு புரிந்தது
ஏகாதிபத்தியத்துக்கு கசந்தது.

உலகம் முழுவதும் என் கால்தடம்
பதிய வேண்டும் என்று
என்னை தோளில் தூக்கி
நகரத்தை நோக்கி
ஓடியவர்கள் ஏராளம்.

நகரம் வந்து அடைந்தேன்
காட்டிலும் பார்க்காத
மிருகத்தை கண்டேன்
என்னை அங்கு அழைத்து
வந்தார்களின் அவசரம் புரிந்தது

Continue reading