விகடனுக்கு வாசகனின் கடிதம்

image

விகடனுக்கு வாசகனின் கடிதம்,

பொதுவாக நீங்கள்(விகடன்) தான் யாருக்காவது கடிதம் எழுதுவது வழக்கம், இந்த முறை ஒரு வெகுஜன வாசகனிடம் இருந்து இந்த கடிதம் உங்கள் பார்வைக்கு.

இந்த கடிதம் நான் எழுத முக்கிய காரணம், சமீபத்தில் உங்கள் முகநூல் பக்கம் (விகடன்,சினிமா விகடன்,..etc) பார்க்கும் பொது நீங்கள் ஒரு குழம்பிய நிலையில் இருப்பதாக தோன்றுகின்றது, பல சமயம் மற்றவர்களை குழப்பும் நிலையில் இருப்பதவும் தோன்றுகிறது.

ரெண்டு வாரங்களுக்கு முன் JNU சர்ச்சை நடந்து கொண்டு இருந்தபோது நீங்கள் தொடர்ந்து கண்ணயாவுக்கு உங்கள் ஆதரவை பதிவு செய்து கொண்டு இருந்தீர்கள். திடீர் என்று ஒரு நாள் “மிக மிக அருமையான” பதிவு ஒன்றை உங்கள் முகநூல் பக்கத்தில் வாசித்தேன். அந்த பதிவின் சாரம் “கம்யூனிஸம் ஒரு குப்பை.அந்த கம்யூனிசத்தை பின்பற்றும் கண்ணயாவும் இடதுசாரிகளும் ஒரு ஏமாற்று பேர்வழிகள்” என்பது தான். இங்கே நான் “நீங்கள் எப்படி கம்யூனிசத்தை முற்றிலும் குறை கூறலாம்” என்று மல்லு கட்டவில்லை ஏன் இந்த தீடீர் “அந்தர் பல்டி” என்று தான் கேட்கிறேன், சரி அது போகட்டும் என்று அன்று மாலையே உங்கள் முகநூல் பக்கத்தில் மற்றோரு பதிவை பார்த்தேன் “கண்ணயாவிடம் அலைபேசியில் பேட்டி” என்ற அந்த பதிவில் கண்ணயாவை “அஹா ஓஹோ” என்று புகழ்ந்து தள்ளிவிடீர்கள். மறுபடியும் ஒரு “மெகா பல்டி”. ஒரு அப்பாவி வாசகனாக அன்று முழுவதும் “சந்துரு” என்கின்ற ஒரு யோக்கியனை நான் உங்கள் முகநூல் பக்கத்தில் தேடிக்கொண்டு இருந்தேன். கடைசி வரை அவனை காணவில்லை, நீங்கள் பார்த்தால் தகவல் சொல்லவும்.

மேற் கூறிய உதாரணம் ஒரு எடுத்தக்காட்டே இதை வைத்து நான் ஒரு கம்யூனிசவாதி என்று தீர்மானித்துக் கொள்ளவேண்டாம், நிச்சயம் எனக்கு கம்யூனிச சித்தாந்தத்தில் முழு உடன்பாடு கிடையாது.

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு , ரசிகர்கள் அடித்துக்கொள்ள கூடாது அவர்கள் பக்குவம் அடைய வேண்டும் என்று பல பதிவுகளில் உங்கள் கருத்தை பகிர்ந்து உள்ளீர்கள், ஆனால் பல நேரம் ரசிகர்கள் அடித்து கொள்வதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம் தான். உங்கள் போஸ்டுக்கு ‘லைக்ஸ்’ கிடைப்பதற்காகவும், “ஷேர்” அதிகம் செய்வதற்காகவும் “தாறுமாறாக” தலைப்பை வைத்து ரசிகர்களை மோத விட்டு வேடிக்கை பார்க்குறீர்கள்.

அதே போல் நம் மக்கள் சமீப காலமாக ‘FWT’ என்ற கொடூர வைரஸ் (Facebook Whatsapp Twitter) தாக்கப்பட்டு மறதி வியாதியில் உள்ளனர் என்பது நீங்கள் அறிந்ததே.இதில் பரிதாபம் என்னவென்றால் FWT வைரஸ் எங்களை தாக்குவதற்கு முன் உங்களை தாக்கிவிட்டது என்பது தான், உங்கள் வாயிலாக எங்களிடமும் பரவிவிட்டது. அத்தியாவசியம் என்ன என்பதை மறந்து “சென்சேஷன்” பின்னாடி நீங்கள் ஓட தொடங்கியது தான் FWT வைரஸ் தோன்றியதின் மூலக் காரணம். வாரம் ஒரு புதிய படம் ரிலீஸ் ஆகுவதைப் போல் தினமும் ஒரு சென்சேஷன் நியூஸ் உங்களிடம் இருந்து. “நாங்கள் மட்டுமா காரணம்? ” என்று கேட்டால் நிச்சயம் நீங்கள் மட்டும் காரணம் இல்லை , ஆனால் நீங்கள்(ஊடகம்) தான் அந்த வைரஸின் வீரியத்தை அதிக படுத்திக்கொண்டு இருக்குறீர்கள். மற்ற பத்திரிகையை பற்றி நான் பேச விரும்பவில்லை தமிழ் பத்திரிகைகளில் என் சிறிய அறிவுக்கு எட்டியவரை நீங்கள் தான் “சூப்பர்ஸ்டார்”, அப்படி ஒரு இடத்தில் இருக்கும் நீங்கள் மற்றவர்களை போல் காரணம் சொல்லி தப்பிக்க இயலாது. சீக்கிரம் FWT வைரஸ் தாக்குதலிடம் இருந்து மீண்டு வாருங்கள்.

உங்களிடம் இருந்து பல பல ஆக்கபூர்வமான பதிவுகள் வந்தாலும் இந்த மாதிரி சில “பல்டி” பதிவுகள் வாசகனை கிறங்கடிக்கிறது (பாவம்யா நாங்க ). முதலில் உங்கள் நிலைபாடு என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் பின் மற்றவர்களுக்கு கடிதம் எழுதி கொள்ளலாம்.உங்களின் நீண்ட நாள் வாசகன் என்ற உரிமையில் இந்த கடிதத்தை எழுத தொடங்கினேன் இந்த கடிதத்தின் சாரம் உங்களை சென்று அடையும் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்.

அன்புடன்,
ஷேக் அப்துல்லா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s