தந்தைமொழி

thanthanimozhi
சில நிமிடக் கதை : தந்தைமொழி

ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வு முடிஞ்சு லீவ்ல நண்பர்களோடு விளையாடிக்கொண்டு இருந்த நேரம் , ஒன்பதாம் வகுப்பு என்பதால், தேர்வு முடிவுக்காக பெருசா கவலை படல, நிச்சயம் “பாஸ்”னு ஜாலிய சுத்திட்டு இருந்தப்ப தான் , அந்த மஞ்ச கலர் போஸ்ட் கார்டு வீட்டுக்கு வந்துச்சு. போஸ்ட கார்ட பார்த்ததும் என் அப்பா முஞ்சி வாடி போச்சு,

என்கிட்ட எதுவும் சொல்லாம, ஸ்கூல் ப்ரின்சிப்பல் ரூம்க்கு என்ன கூட்டிட்டு போனாரு, அங்க போன கொஞ்ச நேரத்துலையே எனக்கு தெரிஞ்சுட்டு , நம்மல 9th STDல DE-PROMOTE பண்ணிடாங்கனு.

ஸ்கூல் ப்ரின்சிப்பல் எங்க அப்பா கிட்ட,

” உங்க பையன் எல்லா சப்ஜெக்ட்லையும் சும்மார் தான், ஆனா அதக்கூட நாங்க சரி பண்ணிடுவோம், but தமிழ்ல உங்க பையன் ரொம்ப ரொம்ப வீக், Single Digitல தான் மார்க் வாங்குறான், இப்படியே இருந்தா கண்டிப்பா உங்க பையன் State Examல fail ஆயிடுவான், எங்க ஸ்கூல்லுக்கு 10thல 100% ரிசல்ட் வேணும், அதனால உங்க பையன ஒன்னு வேற ஸ்கூல் சேருங்க இல்ல 9th stda இன்னொரு தடவ படிக்க வைங்க”னு சொன்னதும் எங்க அப்பா எதுமே சொல்லாம தலைய கீழ குனிசுட்டு இருந்தாரு.

முதல் தடவையா எங்க அப்பா எதுமே பேசாம, தல குனிச்சு இருக்குறத பாத்தேன், அதுவும் என்னால.

எங்க அப்பா கல்லூரி பேராசிரியர்குற காரணத்துனால, ஒரு ஒப்புதல் கடிதம் வாங்கி என்ன 9th std பாஸ் பண்ணிவிட்டாங்க,

ப்ரின்சிப்பல் ரூமா விட்டு வெளிய வந்த என் அப்பா எதுமே பேசாம, என் தலைமுடிய கோதிவிட்டு

“தமிழ்ல ரொம்ப கவனமா படி”னு மட்டும் சொன்னாரு

பத்தாம் வகுப்பும் ஆரம்பிச்சது, பத்தாம் வகுப்பு பாடத்த ஒன்பதாம் வகுப்புலையே நடத்துனதுனால, அந்த வருஷம் முழுக்க மனப்பாடம் பண்றது மட்டும் தான் எங்களுக்கு வேலைய இருந்துச்சு,

Hilterன யாருன்னு தெரியாது,Pythagoras theorem எதுக்கு படிக்குறோம்னு தெரியாது,எங்களுக்கு தெரிஞ்சதுலாம் அட்டToஅட்ட படிக்கணும் sorry “மனப்பாடம்” பண்ணனும். காலைல 7மணிலா இருந்து நைட் 8மணி வரைக்கும் படிக்கணும் திரும்பவும் sorry “மனப்பாடம்” பண்ணனும், சில சமையம் Mathsa கூட மனப்பாடம் செஞ்ச நேரம்லாம் உண்டு.

எல்லாருக்கும் State Examல centum வாங்கணும்னு ஆசை, எனக்கு தமிழ்ல பாஸ் ஆகணும்னு பேராசலாம் கிடையாது,atleast ரெண்டு digit மார்க் வாங்கணும்னு ஆசை, So தமிழ் எழுத்த மனப்பாடம் பண்ணேன், ஒரு எழுத்து விடாம ரொம்ப கஷ்ட பட்டு மனப்பாடம் பண்ண புண்ணியத்துல, எல்லா கிளாஸ் எக்ஸாம்லையும் தமிழ்ல “ரெண்டு digit” மார்க் வர ஆரம்பிச்சுது.

அரையாண்டு தேர்வு எழுதி முடிச்ச அடுத்த நாளே answer பேப்பரோட எங்க கிளாஸ் டீச்சர் வந்தாங்க,
வழக்கம் போல “ரோல் நம்பர்” வரிசை பிரகாரம் paper குடுக்க ஆரம்பிச்சாங்க, ஒவ்வொரு சப்ஜெக்டா குடுத்து முடிச்சு கடைசில
தமிழ் இரண்டாம் தாள் பேப்பரும் வந்துச்சு,

நாம கண்டிப்பா fail தான்னு தெரிஞ்சாலும், வழக்கம் போல அண்டிகலங்க ஆரம்பிச்சுது

ஒவ்வொரு பேப்பர்ரா குடுத்த என் கிளாஸ் டீச்சர் என் பேப்பர் வந்ததும், குடுக்காம தனிய எடுத்து வெச்சாங்க, அப்பவே எனக்கு தெரிஞ்சுட்டு ” rightu சைத்தான் சைக்கிள்ல வந்துடுச்சுன்னு”

எல்லா பேப்பரும் குடுத்து முடிச்சதுக்கு அப்புறம், என் பேப்பர எடுத்து மேடம் வாசிக்க ஆரம்பிச்சாங்க,

அது ஒரு ” மாவட்ட ஆட்சியருக்கு எழுதுற விண்ணப்பக் கடிதம்”, 10மார்க் question

அந்த கடிதத்துல, “மதிப்பிற்குரிய ஐயா”னு போடுறதுக்கு பதிலா நான் “மி-திப்பிற்குரிய ஐயா”னு எழுதி இருந்துருக்கேன்.
இத டீச்சர் கிளாஸ்ல எல்லாரு முன்னாடியும் வாசிச்சதும், கிளாஸ் முழுக்க ஒரே சிரிப்பு,
“எனக்கே சிரிப்பு வந்துச்சு, மத்தவங்களுக்கு வந்துருக்காத”.

அது வரைக்கும் ரொம்ப பெரிய தாழ்வு மனப்பான்மையோடு மட்டும் இருந்த எனக்கு, இந்த சம்பவம் அதையும் தாண்டி ஒரு கனமான அழுத்தத்த உண்டு பண்ணுச்சு, சரி இனி இங்க இருக்க வேண்டாம்னு முடிவு பண்ணேன்.

அடுத்தநாள் காலைல, வழக்கமா ஸ்கூல்க்கு போகுற சைக்கிள்ல ஒரு கடைல விட்டுட்டு, ByePass ரோட்ல நடக்க ஆரம்பிச்சுட்டேன்.எதுக்கு இப்படி நடக்குறோம்? எங்க போறோம்?னு எதுவும் தெரியாது, ஆனா மானசுல யாரு மேலையோ பெரிய கோவம்,எதோ பொலம்பிட்டு வேகமா நடந்து போனேன், நல்ல வெயில் கண்ணுல அப்பா அம்மா முஞ்சி மட்டும் தெரியுது,ஒரு கட்டத்துல என்ன ஆச்சுனு தெரியல என்ன சுத்தி ஒரே கூட்டம்

ஆமா, நா மயங்கி விழுந்துருக்கேன்,என்ன தூக்கி ஒரு கடைல உட்கார வேட்சுருகாங்க, அப்புறம் அங்க இருந்த சில நல்ல மனுசங்க புண்ணியத்துல “ByePass Lorry”ல ஊருக்கு உள்ள அனுப்பி வேட்சங்க,

காலைல விட்ட இடத்துல இருந்து சைக்கிள்ல எடுத்துட்டு வீட்டுக்கு போனேன், மத்தியமே வீட்டுக்கு வந்தத பார்த்தும், என் மூஞ்சி முழிச்ச முழிய பார்த்தும் எங்க அப்பா என்ன ஸ்கூல்க்கு கூட்டிட்டு போனாரு, அங்க என் டீச்சர் நா இன்னைக்கு ஸ்கூல்க்கு வரலைனும் கூடவே என் தமிழ் புலமைய பத்தி சொன்னதுல இருந்து , எங்க அப்பாக்கு தெரிஞ்சுடுச்சு, இந்த பய எதோ வில்லங்கம் பண்ணிருக்கானு

என் கிளாஸ் டீச்சர்ட, அவனுக்கு உடம்பு சரி இல்ல, நாளைக்கு ஸ்கூல்க்கு வருவான்னு சொல்லிட்டு, என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தவரு, நடந்தத கேட்டாரு, நானும் நா பண்ண மாபெரும் வீரதீர கதைய சொன்னேன்.

நா சொல்ல சொல்ல எங்க அப்பா கண்ணு கலங்க ஆரம்பிச்சுது,எதுமே பேசாம கொஞ்ச நேரம் அமைதியா இருந்தாரு,அப்புறம் என்கிட்ட,

“உன்னால முடியுற அளவுக்கு நீ படி, Pass Fail பத்தி கவல படாத , உனக்கு தமிழ்ல தான் பிரச்சனைன நீ State Examல fail ஆகு, அடுத்த வருஷம் படிச்சுக்கலாம் இல்ல இந்த ஸ்கூல் தான் பிரச்சனைன சொல்லு இப்பவே ஸ்கூல நிப்படிடலாம் அடுத்த வருஷம் வேற ஸ்கூல்ல 10th படிச்சுக்கோ,ஆனா இதே மாதிரி திரும்ப இப்படி பண்ணாத , உன்கிட்ட என்னைக்காச்சும் நா மார்க் கேட்டுருக்கேனடா?, ஏன்டா எப்படி பண்ணேனு” என்ன கட்டிபுடிச்சு அழுத்தப்ப, எப்படியாச்சும் இந்த கருமம் புடிச்ச தமிழ் எனக்கு புரியாதனு ஒரு ஏக்கம்.

அன்னைக்கு நைட்டே திடிர்னு அப்பா என்ன பார்த்து, தமிழ் புக்க எடுத்துட்டு இங்க வானு சொன்னாரு,தமிழ் பாடத்த ஒப்பிக்க சொன்னாரு, நானும் ஒப்பிச்சேன்,

ஒழுங்கா தான சொல்ற பின் என்னடா உனக்கு தமிழ்ல பிரச்சனை, அப்பா

தமிழ் படிக்குறதுல பிரச்சனை இல்லப்பா,எழுதுறது தான் வர மாட்டிக்குது, நான்

சரி, நீ இப்ப சொன்னதையே, எழுதிக்காமினு அப்பா சொன்னதும், நானும் எழுதி முடிச்சுட்டு, காமிச்சேன்

ரெண்டு நிமிஷம் பாத்தாரு, ஒரு pencil வெச்சு, என் கிளாஸ் டீச்சர் மாதிரியே, வட்ட வட்டமா மார்க் பண்ணாரு,

“அது சரி , நீங்களும், ஒரு வாத்தியார் தான, அதே ஜாதி அதான் அதே மாதிரி பண்றிங்க”னு மனசுல நினைச்சுகிட்டேன்

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்,

“டேய், உன் பிரச்சனை என்னனு தெரிஞ்சுட்டு, நீ “சே” போட வேண்டிய இடத்துல “சொ” போடுற
“கே” போட வேண்டிய இடத்துல “கொ” போடுற, எதுக்கு இப்படி எழுதுறனு கேட்டதும்,

நாம சும்மா இருப்போமா,குடுத்தோம்ல ஒரு explanation

“க” குறில் -> extra ஒரு துணை எழுத்து போட்ட -> “கா” நெடில் அதே மாதிரி
“செ” குறில் -> extra ஒரு துணை எழுத்து போட்ட -> “சொ” நெடில் … “சொவல் சண்டை”னு
ஒரு example வேற பந்தாவா எழுதி காமிச்சேன்.

எங்க அப்பா சிரிச்சுட்டே, இது வரைக்கும் எங்க ஸ்கூல் எனக்கு தமிழ்ல போட்ட கோடு பூராத்தையும் அழிச்சுட்டு , வெறும் அரைமணி நேரத்துல தமிழோட அடிப்படைய exampleலோட சொன்னாரு

அன்னைக்கு நைட் இந்த உலகத்துல என்ன விட வேற எந்த பயலும் அவ்வளோ சந்தோசமா துங்கபோயிருக்க
மாட்டான், இருக்காத பின்ன, காலைல எந்த தமிழுக்கு பயந்து வீட்ட விட்டு போனேனோ, நைட் அந்த தமிழ் புரிஞ்சுட்டு,அது மட்டும் இல்லாம எங்க அப்பாட்ட தப்பு இல்லாம எழுதி வேற காமிச்சாச்சு

10th State Exam மார்க்க பார்க்க நானும் எங்க அப்பாவும் கம்ப்யூட்டர் சென்ட்டர் போனோம்,
Register numbera குடுத்து பட்டன்ன தட்டுனதும் என் Marksheet ஓபன் ஆச்சு,

என் கண்ணும் எங்க அப்பா கண்ணும் firstu தேடுனது தமிழ் மார்க்க தான்

திடிர்னு நானும் எங்க அப்பா அப்படியே சந்தோசத்துல கத்துனோம்.

Marksheetல தமிழுக்கு பக்கத்துல “174” னு பிரிண்ட் ஆகிருந்துச்சு

—————-தந்தைமொழி—————–

– ஷேக் அப்துல்லா

குறிப்பு : என்ன 174 மார்க் எடுக்க வைத்ததற்காக மட்டும் இல்ல , எப்பவுமே என்ன விட்டுக்குடுக்காத என் அப்பாக்காக இந்த “தந்தைமொழி”

2 thoughts on “தந்தைமொழி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s