வருடும்போது தென்றலாய் பாவித்தாய்!
நான் நுகர பூவாசமாக இருந்தாய்!
கோபம் கொண்டால் புயலாய் உருவெடுத்தாய்!
இதல் மலர வார்தைகளுக்கு வித்திட்டாய்!
துவாரம் புகுந்து இசை பாடினாய்!
நீ சாயம் மாறாமல்போனால்,
இத்தனை அதிசயம் எங்கு காணோம்,
என்னை உயிர் பிழைக்கச் செய்த உயிர் வளியே!!
– சந்திரகணேஷ்