பைத்தியக் கவிதை

image

நிலவுக்கு தெரியுமடி
நம் காதலின் நீளம்..
இரவுக்கும் தெரியுமடி
நம் புரிதலின் ஆழம்

உன் விழி பாராமல்
என் இமை ஏங்கிட…
கண் சிமிட்டும் நேரத்தில்
என் கனவில் குடிபுகுந்தாய்

மனசும் துடிக்குதடி
உன் முகம் பார்த்திட..
என் தேடல் நீ தானே
உன் முகம் நான் தானே

போடி என் பெண்ணே
நான் ஒரு பைத்தியம்
என் பேச்சை கேட்காமல்
நினைவும் சுத்துதடி
உன் விழி ஓரமாய்

-ஷேக் அப்துல்லா

சென்னை மழை

68 மணிநேர மின்சாரத் துண்டிப்பு
50 மணிநேர போக்குவரத்து துண்டிப்பு
42 மணிநேர தொலைதொடர்பு துண்டிப்பு
தெளிவாக உணர்த்தியது
அறிவியலில் நாம் இன்னும்
“கத்துக்குட்டி”தான் என்று.

-ஷேக்

#Chennairains

சென்னை மழை

இயற்கையிடம் மனிதன்
தோற்றதைப் போல்….
மனிதநேயத்தைக் கண்டு
இயற்கையும்  சற்று மலைத்தது
உண்மைதான்.

-ஷேக்

#Chennairains