மகளதிகாரம் – முதல் பிரிவு !!!  ( பாகம் – 3)

image

“உங்க பொண்ணு ஸ்கூலுக்குதான போன
அதுக்கு எதுக்கு மூஞ்ச தூக்கி வெட்சுறுகிங்க?னு”
மனைவி என்னை திட்டிக் கொண்டே பாத்திரம்
கழுவி கொண்டு இருந்தால்.

அவளுக்கு புரிந்த அளவுக்கு எனக்கும்
இந்த பிரிவின் காரணம் புரிந்தாலும்,
மனசுல என்னோ தாங்க முடியாத ஒரு வேதனை

பிறந்த நொடியில் இருந்து
என் மடியிலும்,மார்பிலும் கண்ணிலும்
தவழ்ந்த என்  மகள் இல்லாமல்
நானும் என் வீடும் வெறிச்சோடிக் கிடக்கிறோம்.

பயம் பிரிவில் மட்டும் இல்லை, இனி
நான் மட்டும் அவள் உலகம் இல்லை,
நான் மட்டும் அவள் நண்பன் இல்லை,
நான் மட்டும் அவள் சந்தோஷம் இல்லை
என்கின்ற ஒரு சிறுபிள்ளைத் தனமான ஆதங்கமும் தான்

மகளை காணும் ஆசையோடு ஒரு
மணி நேரத்துக்கு முன்னதாகவே அவள்
ஸ்கூல் வாசலில் காத்துக்கொண்டு இருந்தேன்

சிரித்த முகத்தோடு “அப்பாஆ” என்று
கத்திக் கொண்டே என் தேவதை ஓடி
வந்து என்னை அனைத்துக் கொண்டாள்

முதல்நாள் எப்படி இருந்தது?  என்று கேட்டதும்
“சோமு,இயல்பா,செல்வினு எனக்கு
மூணு பிரெண்ட்ஸ்  இருக்கங்களே”னு
சிரித்துக் கொண்டே அவள் சொல்ல,
என் மனதில் ஏனோ ஒரு சின்ன சோகம்

சிறு இடைவேளைக்கு பின் ,
கண்சிமிட்டிய படி என் முகத்தை பார்த்து
“ஆனா யாரும் உன்ன மாதிரி இல்லப்பா”னு சொல்லி மார்போடு அவள் என்னை கட்டி அணைக்க;
கண்ணில் நீர் வழிய பெருமிதத்தோடு
என் தங்கத்தின் நெற்றியில் முத்தம்மிட்டேன்.

– ஷேக் அப்துல்லா

மகளதிகாரம் – தங்க வார்த்தை ( பாகம் – 1)
மகளதிகாரம் – பொம்மை ( பாகம் 2)
மகளதிகாரம் – முதல் பிரிவு !!!  ( பாகம் – 3)

Click : https://minthuligall.wordpress.com/tag/magalathigaram/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s