ஏழை

Poverty

கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற மொழி
கந்தை இருக்கும் இடத்திலே பொருந்தும்!
ஏழையின் சிரிப்பினில் கடவுளைக் காணலாம் என்றான் ஒருவன்
கடவுள் இல்லை என்பதனாலா?
கடவுள் ஏழைகளை எளிதாகப் படைத்தான், அவன்
மெலியவன் என்பதனாலா?
செய்யும் பாவத்திற்கு கூட சம்பளம் உண்டு என்று புனித நூல் கூறியது
அவன் உழைப்புக்கு மட்டும் ஏன் ஊதியம் இல்லை?
இளமையில் வறுமை சாலக் கொடிது என்றுரைத்தாள் ஒரு மூதாட்டி,
அது என்றைக்குமேக் கொடிது என்று ஏன் சொல்ல மறுத்தாள்?
கடவுளும் தரணி வந்து வறுமையோடு வாழ்ந்துப் பார்க்கட்டும்
அப்படியானால்,
தனக்கே கருத்தடை செய்துகொள்வான் ஏழைகளைப் படைக்காமல் நிறுத்த!

– சந்திரகணேஷ்

ஓடம்

Rodney_boat

தனி கரையில் ஓடம் நான்;
தண்ணீரில் பயணம் செய்ய ஆசைப்பட்டேன்,
காற்று தடுக்க எண்ணியது,
என் வடிவைக் கொண்டு தடுத்தேன்!

அலை தடுக்க நினைத்தது நங்கூரம் பாய்ச்சினேன்!
துடுப்பு மட்டும் இல்லை என்றால்
நான் இறந்தும் கரை ஒதுங்க மாட்டேன்!!

“என் அறிவு தசை அல்ல மரம் தான்
ஆனால் தசை கொண்ட அறிவு மட்டும் ஏன் மறத்தைத் தேடுகிறது!”
உயிர்களைத் தாங்கிச் செல்கிறேன்
ஆனால் எனக்கு உயிர் இல்லை!

பிற உயிரைக் காப்பாற்ற முடியும்
தண்ணீரில் மிதந்து சென்றாலும்,
மனிதனுக்குரிய வேறுபாடு இதுவே!
கரை ஏறி வர ஆசை என்னை சோதிக்கும்
அலையை விட்டு பொறுமை என்ற
நிலத்தைத் தேடி!!

 

– சந்திரகணேஷ்

கைபேசியின் மமதை

image

*”கைபேசியின் மமதை”*

நான் அலை இல்லாமல் இயங்க மாட்டேன்
அது போல் என் அலை இல்லாமல்
உலகம் சுழல மறுக்கும்!
என்னைப் பேசிக் கரைத்த காதலனுக்கு
நான் மரியாதை செய்ய,அவன்
காதலியை நேரில் காண வழி செய்தேன்
என் தொழில் நுட்ப்பத்தை பயண்படுத்தி!
கடவுளை துயில் எழுப்ப கோவில் மணி போலே
மனிதனுக்கு என் மணி ஓசை கொடுத்தேன்!
மனிதன் தன் மனதோடு மற்றவர்களுடன்
பேச முனைந்தால் என் வளர்ச்சி தடைபடும்
என்று சினம் கொண்டு உரங்காமல் விழித்தேன்
என் இலத்திரன் இருக்கும் வரையில் !

– சந்திரகணேஷ்

உள்ளுணர்வு

image

ஒளி நோக்கியத் தேடல் என்றோ முடிந்தது,
என் உடல் மட்டும் இங்கே துலைந்தது,
நினைவுகள் கோடி வானில் கலந்தது,
போதி மரமும் அதனை சுவாசித்து வளர்ந்தது,
அவ்வகையில் பௌத்தமும் எனக்கு அடிமை ஆனது

– சந்திரகணேஷ்