மண்

image

மேகம் என்னை முத்தமிட்டு நாட்கள் ஆனது!
உரம் கலந்த வேலையிலேயே என் இருதயம் பழுதானது!
உழவின் நண்பனைத் தேடியும் தோன்றாமல் போனது!
என் பச்சை ரோமங்கள் வளராமல் அழிந்தது!
மனிதனின் பேராசையாலும்,போட்டியாலும் மீதம் இருந்த சொந்தங்களும் மறைந்தது!!
-இப்படிக்கு மண்.

– சந்திரகனேஷ்!

Advertisements

சாபக்கேடு

image

வளங்கள் அனைத்தையும்
சுரண்டி..
இனங்கள் அனைத்தையும் 
கொன்று..
மரங்கள் அனைத்தையும் 
கடைந்து..
தன் பசி போக்கிக்கொள்ளும் 
மனிதன் என்னும் ஒட்டுண்ணி 
இந்த பிரபஞ்சத்தின் 
சாபக்கேடு 

– ஷேக் 

ஓர் கனவு

image

பனியில் நிலவு
மடியில் நீ..
தனிமை இடம்
தழுவும் மனம்..

சுருங்கிய தோல்களும்
தாமரையாய் சிவந்தது..
மங்கிய விழிஒளியும்
நிலவொளியில் ஜொலித்தது..

லட்சம் முறை உண்டும் ;
கெஞ்சும் என் விழிகள்
லட்சம் முறை கொடுத்தும்;
மிஞ்சும் உன் உதடுகள்.

எள்ளளவும் குறையாத
காதலுடன் – நீயும் நானும்
நம் முதுமை காலத்தில்.

– ஷேக்

உன் உலகில்

image

திசை அனைத்திலும்
உன் நிழல்..
நிழல் அனைத்திலும்
உன் உடல்..
உடல் அனைத்திலும்
உன் முகம்..
முகம் அனைத்திலும்
உன் விழி..
சிக்கி தவிக்கின்றேன்
உன் உலகில் நான்.
– ஷேக்

என் உயிர் நண்பன்

image

பசித்த பொழுது
உணவாக இருந்தாய்..
உன்னை எரித்து
என் துயர் போக்கினாய்..
துன்பத்திலும் இன்பத்திலும்
கையேடு கைகோர்த்தாய்
கெடுதிதான் என்றாலும்
என் உயிர் நண்பன் நீ
சிகரெட்.
– ஷேக்