மகளதிகாரம் – தங்க வார்த்தை !!!  ( பாகம் – 1)

image

ஈரெட்டு வயதில் மீசையுடன்
வளர்ந்த ஆசைகளில்
ஓர் ஆசையும்
ஓர் பேராசையும் அடங்கும்.

ஆசை – மகள் வேண்டும் என்று ;
பேராசை – அவள் முதல்
வார்த்தை  ‘அப்பா’வாக இருக்க
வேண்டும் என்று;

முதல் ஆசை நிறைவேறிய
பேரானந்தத்தில்  மனமும் காலமும்
வேகமாக ஓடியது
பேராசை நிறைவேறும்
நாளை எண்ணி.

என் தங்கத்துக்கு
‘அம் அம் ‘ ஊட்டும் போதெல்லாம்
‘ அப்பா ‘ என்ற
வார்த்தையையும் சேர்த்து
ஊடினேன்.

என் தங்கம்  பலமுறை
‘அப் அப் ‘ என்று
கவிதை பேச பழகும் போதெல்லாம்
நெஞ்சில் கர்வம் கலந்த
மகிழ்ச்சி.

மார்கழி மாதம் – என் மார்போடு
இருக்க அணைத்த அவள் ;
திடீர் என்று தலையை உயர்த்தி
என்  விழியை  பார்த்து
கண்கள் விரிய..
பூ இதழ் மலர..
‘ அப்ப’ என்று அவள் உச்சரிப்பு
முடியும் முன் ‘அட்ச்’
என்று தும்மி முடித்தால்
‘அம்மா ‘ என்ற சொல்லோடும் .

– ஷேக் அப்துல்லா

————————————————————-

For,

மகளதிகாரம் – தங்க வார்த்தை ( பாகம் – 1)
மகளதிகாரம் – பொம்மை ( பாகம் 2)
மகளதிகாரம் – முதல் பிரிவு !!!  ( பாகம் – 3)

Click : https://minthuligall.wordpress.com/tag/magalathigaram/

Advertisements

One thought on “மகளதிகாரம் – தங்க வார்த்தை !!!  ( பாகம் – 1)

  1. Pingback: மகளின் – பொம்மை ( பாகம் 2) | மின்துளிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s