தனிமை

image

தனிமை என்றேன் நிழலும் துனை இல்லை,
நான் சுவாசித்தக் காற்றில் துளிகூட கனிவு இல்லை,
என் கண்களோடு கசியும் செண்ணீ ர் கண்ணீரும் இல்லை,
அன்பிற்கு அடிமையான என்னை
இந்த வாழ்கை ஏற்றுக் கொள்ளவில்லை!!

– சந்திரகணேஷ்.

Advertisements

படித்ததில் பிடித்தது

image

எழுதும் எழுத்திற்கு முதல் எதிரி
கடைசியில் நிற்க்கும் என் பெயர் மட்டுமே ;
ஆகவே இனி என் பெயரை
” படித்ததில் பிடித்தது ” என்று மாற்றிக்கொள்கிறேன்

– Sheik

மகளதிகாரம் – தங்க வார்த்தை !!!  ( பாகம் – 1)

image

ஈரெட்டு வயதில் மீசையுடன்
வளர்ந்த ஆசைகளில்
ஓர் ஆசையும்
ஓர் பேராசையும் அடங்கும்.

ஆசை – மகள் வேண்டும் என்று ;
பேராசை – அவள் முதல்
வார்த்தை  ‘அப்பா’வாக இருக்க
வேண்டும் என்று;

முதல் ஆசை நிறைவேறிய
பேரானந்தத்தில்  மனமும் காலமும்
வேகமாக ஓடியது
பேராசை நிறைவேறும்
நாளை எண்ணி.

என் தங்கத்துக்கு
‘அம் அம் ‘ ஊட்டும் போதெல்லாம்
‘ அப்பா ‘ என்ற
வார்த்தையையும் சேர்த்து
ஊடினேன்.

Continue reading

Advertisements

திருநங்கை

image

என் சமுகமே!!!
பிட்சைக்கு சுளிகிறாய்
இச்சைக்கு இளிகிறாய் ;
காமம் காட்டிய கண்ணில்
கருணை காட்ட மறுக்கிறாய்.

மானியம் கேட்கவில்லை
கண்ணியமே கேட்கிறோம்;
கட்டித்தழுவ உடலை கேட்கவில்லை ;
சாய்ந்து அழுக தோள்களையே கேட்கிறோம் .

– ஷேக் அப்துல்லா

Advertisements

நட்பு

image

பூம்புகார் இருந்தபோதே தெரிந்த ஒன்று,
காற்றலை இல்லாமலும் தொடர்ந்த ஒன்று,
ஏகனாலும் அளக்க முடியாத ஒன்று,
பல பரிமான வளர்ச்சி தாண்டியும் வளர்ந்த ஒன்று,
மரபனுக்கள் மாறியும் மாறாத ஒன்று,
அறிவியலின் மூளைக்கே சவால் என்ற ஒன்று – நட்பு!!
– சந்திரகணேஷ்

Advertisements

மழை

image

மயிலினம் இடியின் ஜதி கேட்டு ஆட,
ஆட்டம் கண்டு நுனலும் பாட்டிசைக்க,
மேகம் சிரித்து மின்னலாய் வெட்ட,
ஆனந்தமாய் பிறக்கும் குழந்தை-மழை!!

-சந்திரகணேஷ்

Advertisements

பறவையின் நம்பிக்கை

image

படி தாண்டி தடை தாண்டி
வானம் தொட வேண்டி
தண்ணீரைக் கயிராய்த் திரித்து
பறந்து வந்தேன்,
நீ நின்றாலும் காற்றைத்
துணைகொண்டு தொட்டுவிடுவேன்!!

– சந்திரகணேஷ்

Advertisements